என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிவாரண நிதி"
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களாக பெய்த அதி கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பத்து நாட்களுக்குள் தலா நான்கு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் அறிவித்து இருக்கிறார். ஏற்கனவே, ஓராண்டிற்கு முன்பு நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பத்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி உள்ளதால் 4 லட்சம் ரூபாய் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
ஏற்கனவே உயர்த்தி அறிவிக்கப்பட்டதை குறைத்து அறிவிப்பது இயற்கை நியதிக்கு முரணானது. அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் பத்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்க வேண்டும் என்பது தான் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே, முதல்அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, அண்மையில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்க உத்தர விட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்...580 ஆண்டுகளுக்கு பிறகு மிக நீண்ட நேர பகுதி அளவு சந்திரகிரகணம் - இந்த மாநிலங்களில் மட்டுமே காணமுடியுமாம்
மதுரை மேலூரைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன், தஞ்சை பேராவூரணியைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய குழு தனது இறுதி அறிக்கையை எப்போது தாக்கல் செய்யும் என கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் வாதாடும்போது, மத்திய அரசின் மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியில் போதுமான பணம் இருப்பு உள்ளது.
இருப்பினும் கஜா புயல் நிவாரணத்திற்காக தமிழகத்திற்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றார்.
அதைத் தொடர்ந்து மத்திய அரசு வக்கீல் வாதாடும்போது, மத்திய குழு அளித்த இறுதி அறிக்கை அடிப்படையில் தான் நிவாரண நிதி ஒதுக்க முடியும். அதற்காக தான் தமிழக அரசிடம் கூடுதல் விவரம் கேட்கப்படுகிறது என்றார்.
இதைத் தொடர்ந்து நிவாரணம் வழங்குவது தொடர்பாக எப்போது முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆதிகேசவலு, சசிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு ஆஜராகி, மாநில பேரிடர் நிவாரண நிதி ரூ. 1,277.62 கோடியை கஜா புயல் நிவாரணப்பணிகளுக்கு தமிழக அரசு செலவு செய்து கொள்ளலாம்.
மத்திய குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும். அதன் பேரில் மத்திய அரசு நிவாரண நிதி வழங்குவது பற்றி 2 வாரத்தில் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள் இந்த வழக்கை ஜனவரி மாதம் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #GajaCyclone #ReliefFund
புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் காரைக்காலில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்களுக்கு மழைக்கால நிதியாக ரூ.2,500 வழங்கப்படுகிறது. அத்துடன் சேர்த்து மேலும் ரூ.2,500 வழங்கப்படும். நிவாரண உதவியாக 9,500 விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், முழுமையாக பாதிக்கப்பட்ட 1,500 குடிசைகளுக்கு தலா ரூ.4,500 வழங்கப்படும். இந்த நிவாரண தொகை இன்று (திங்கட்கிழமை) பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். நான் டெல்லி சென்று உள்துறை செயலாளர், மத்திய மந்திரி அருண்ஜெட்லியிடம் புயல் நிவாரணத்துக்கு ரூ.187 கோடி கேட்டுள்ளேன். மத்தியக்குழு அறிக்கை அளித்தபின் வழங்குவதாக கூறியுள்ளனர்.
காரைக்காலில் புயல் பாதித்த பகுதிகளை மத்தியக்குழு இன்று பார்வையிடுகிறது. ஆய்வை முடித்து நாளை (செவ்வாய்க்கிழமை) புதுவை தலைமைச் செயலகத்தில் எங்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார். #GajaCyclone #Narayanasamy
தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அரசு சார்பிலும், தனியார் நிறுவனம், அரசியல் கட்சிகள், திரை உலகம் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், சேத மதிப்பு தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதியை பெற்றுவருவதற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர்.
அதில் தமிழகத்துக்கு தேவையான மத்திய அரசின் நிதி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. கஜா புயலினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டன? அதிலிருந்து மக்களை மீட்கும் பணிகள் மற்றும் நிவாரணத்துக்கு ஆகும் செலவுகள் குறித்து கூறப்பட்டுள்ளது. கணிசமான நிதியை முதல் கட்டமாக ஒதுக்கும்படி பிரதமரிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். இதையடுத்து மத்திய அரசு முதற்கட்டமாக குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழக அரசின் கோரிக்கையின் அடிப்படையில், சேதங்களை மதிப்பிடுவதற்கு மத்திய அரசு தனது அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழகத்துக்கு அனுப்பி ஆய்வுகளை நடத்தும். புயல் சேதங்களை அந்த குழு மதிப்பிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கும். அதன் பின்னர் தேவையான நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்கும். #GajaCyclone #EdappadiPalaniswami #Modi
கர்நாடகாவில் கடந்த மாதம் கடும் மழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு கடும் சேதம் ஏற்பட்டது. இந்த சேதத்தை சரிசெய்ய உள்துறை மந்திரியிடம் ஏற்கனவே நிதியுதவி கேட்டு கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்து இருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற உள்துறை மந்திரி மத்திய ஆய்வுக்குழு வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்ய விரைவில் கர்நாடகா அனுப்பிவைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆய்வுக்குழுவின் முடிவை பொருத்து எவ்வளவு நிதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கேரளாவில் வெள்ள நிவாரண பணிக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் நிதி உதவிகள் வழங்கி வருகிறார்கள். தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கேரளாவுக்கு நிவாரண நிதியும், பொருள்களும் வழங்கி உள்ளனர்.
இதுபோல ம.தி.மு.க. சார்பிலும் கேரளாவுக்கு ரூ.35 லட்சம் நிவாரண நிதி மற்றும் பொருள்கள் வழங்கப்படுகிறது. இப்பொருள்களை ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ திருவனந்தபுரத்திற்கு நேரில் சென்று வழங்குகிறார். இதற்காக அவர் நிவாரண பொருட்களுடன் நெல்லையில் இருந்து புறப்பட்டார். இன்று காலை நாகர்கோவில் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரள மக்களின் துயரத்தில் ம.தி.மு.க.வும் பங்கெடுத்து கொள்கிறது. இதற்காக ம.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருள்களும் வழங்கப்படுகிறது.
இதனை நானும், ம.தி.மு.க. நிர்வாகிகளும் திருவனந்தபுரத்திற்கு நேரில் சென்று வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் 483 பேர் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும் பலர் தங்கள் வீடு, உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்த கனமழையால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சேதத்தை சரிசெய்ய நிதி திரட்டும் முனைப்பில் தற்போது கேரள அரசு உள்ளது. முன்னதாக கேரள மாநிலத்துக்கு நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் அளிக்க முன்வந்தது. ஆனால் அதை மத்திய அரசு வாங்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், அரசின் இந்த முடிவை கைவிடுமாறு கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.வி. தாமஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், வெளிநாடுகளுக்கு அமைச்சர்களை அனுப்பி கையேந்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனவும், இதனால், இந்தியா மற்றும் கேரள மக்களின் சுயமரியாதை பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கேரள மந்திரிகள் நிதி திரட்டுவதாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை கைவிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைந்து புணரமைக்க பாடுபட வேண்டும் என கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்மந்திரி உம்மன்சாண்டி கூறியுள்ளார். #KeralaFlood #KVThomas
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்